'சிமென்ட் விலை நிர்ணயிக்க ஒழுங்குமுறை ஆணையம் தேவை' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'சிமென்ட் விலை நிர்ணயிக்க ஒழுங்குமுறை ஆணையம் தேவை'
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 நவ
2021
09:29

கோவை : 'சிமென்ட் விலையை நிர்ணயம் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்' என்று, 'பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா' வலியுறுத்தியுள்ளது.



அமைப்பின் மாநில தலைவர் சிவக்குமார், முன்னாள் அகில இந்திய தலைவர் ராதாகிருஷ்ணன், கோவை மைய தலைவர் பன்னீர்செல்வம் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:

மூலப்பொருட்களின் விலை உயராத நிலையில், சிமென்ட் விலை மட்டும் 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சிமென்ட் ஆலை அதிபர்கள் கூட்டாக சேர்ந்து செயற்கையாக விலையை உயர்த்தி கொண்டுள்ளனர்.திடீரென்று கம்பிகளில் ஏற்பட்ட விலை ஏற்றத்தால் கட்டுனர்கள் நிலை குலைந்து போயுள்ளனர். இந்த 40 சதவீத விலைஏற்றத்தால் தொழிலை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மணல், செயற்கை மணல், ஜல்லி, மெட்டல், பிளை ஆஷ் கற்கள் என்று கட்டடம் கட்டுவதற்கு தேவையான அனைத்து மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.குறிப்பாக, சரக்கு லாரிகளில் அதிக எடை ஏற்றக்கூடாது என்ற நிபந்தனையால், 30 சதவீதத்துக்கும் மேலாக கட்டட கட்டுமானப்பொருட்களின் விலை சந்தையில் உயர்ந்துள்ளது.

செங்கல் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.கட்டட மூலப்பொருட்களை அத்தியாவசிய தேவைக்கான பட்டியலில் சேர்த்து, அதன் மீதுள்ள ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும். சிமென்ட் விலையை நிர்ணயம் செய்ய, ஒழுங்கு முறை ஆணையத்தை அமைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X