கோபி: கோபி அருகே, குருமந்தூர்-கொளப்பலூர் சாலையில், 50 வயது பெண், அவரது மகள் டி.வி.எஸ்., மொபெட்டில், நேற்று காலை, 11:00 மணிக்கு சென்றனர். மகள் ஓட்ட, தாய் அமர்ந்து சென்றார். வெள்ளைப்பாறை மேடு என்ற இடத்தில், தாயின் சேலை பின் சக்கரத்தில் சிக்க, இருவரும் தடுமாறி விழுந்தனர். அப்போது அவ்வழியே வந்த கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், காரை விட்டு இறங்கினார். சிராய்ப்பு காயமடைந்த தாய், மகளுக்கு, தனது காரில் வைத்திருந்த முதலுதவி சிகிச்சை மருந்துகளை அளித்து உதவினார். இதையடுத்து இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உதவினார்.