சேலம்: சேலம் மாவட்டத்தில், 12வது மெகா தடுப்பூசி முகாம், 1,392 மையங்களில், நேற்று நடந்தது. அப்பணியில், 18 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். அவர்கள், தகுதியானவகளை முகாமுக்கு அழைத்து வந்து தடுப்பூசி போடும்பணியை மேற்கொண்டனர். சேலம் சுகாதார மாவட்டத்தில், 41 ஆயிரத்து, 476 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், 32 ஆயிரத்து, 492 பேர், மாநகராட்சியில், 12 ஆயிரத்து, 537 பேர் என, 86 ஆயிரத்து, 505 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.