மகளின் ஆபாச படத்தை தாய்க்கு அனுப்பி ரூ.1.8 கோடி பறிக்க முயன்ற நபர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2021
10:33


சென்னை : மகளின் ஆபாச படத்தை தாய்க்கு அனுப்பி ரூ.1.8 கோடி பறிக்க முயன்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.








சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 55 வயது பெண், டி.பி., சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது:



என், 26 வயது மகளுக்கு, அமெரிக்காவில் வேலை செய்யும் தினேஷ் என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டு, 2022 மார்ச் மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வெளிநாட்டு எண்ணிலிருந்து என் மொபைல் போனிற்கு, என் மகளின் ஆபாச படங்களை மர்ம நபர் அனுப்பி வைத்தார். 1.8 கோடி ரூபாய் கொடுத்தால், புகைப்படங்களை அழித்து விடுவதாகவும்; இல்லையெனில், மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்வதோடு, மாப்பிள்ளை வீட்டாருக்கும், அனுப்புவேன் என மிரட்டல் விடுக்கிறார்.



இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.




இது குறித்து, டி.பி., சத்திரம் போலீசார் விசாரித்தனர். இதில், பணம் கேட்டு மிரட்டியது, போரூர், லட்சுமி நகரைச் சேர்ந்த ரமேஷ், 51, என்பது தெரிய வந்தது. விசாரணையில், ரமேஷ் 1994ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.ரமேஷின் மனைவியும், புகார் அளித்த 55 வயது பெண்ணும் பள்ளிக்கூட நண்பர்கள். இரு குடும்பத்தாரும், 25 ஆண்டுகளாக குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர்.



இந்நிலையில், 2019ம் ஆண்டு புகார் அளித்த பெண்ணின், 26 வயது மகள், அமெரிக்காவில் படிக்க சென்ற போது, ரமேஷ் தேவையான உதவிகளை செய்துஉள்ளார். மேலும், 2020ம் ஆண்டு புகார் அளித்த பெண் மற்றும் அவரது கணவர், சென்னையில் வீடு வாங்குவதற்கு பணம் தேவைப்பட்ட போது, ரமேஷ், 50 லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.


இந்நிலையில், ரமேஷின் மகன் வெளிநாட்டில் படிப்பதற்கு அதிக பணம் செலவாகி, கடன் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 6ம் தேதி ஒரு மாத விசாவில் சென்னை வந்த ரமேஷ், தான் கடன் கொடுத்த, 50 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார். புகார் அளித்த பெண் மற்றும் அவரது கணவர் தற்போது பணம் இல்லை என, மறுத்துவிட்டனர்.



இதனால், ஆத்திரம் அடைந்த ரமேஷ், சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தபடி, வெளிநாட்டு சிம் கார்டை பயன்படுத்தி, புகார் அளித்த பெண்ணின் மொபைல் போன் எண்ணிற்கு,அவரது மகளின் ஆபாச படங்களை அனுப்பி, வேறொரு நபர் போல் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.



சைபர் குற்றப்பிரிவினரின் நவீன நுணுக்கமுறை மற்றும் முறையான விசாரணையால், டி.பி., சத்திரம் போலீசாரால், ரமேஷ் கைது செய்யப்பட்டார். ரமேஷ், இன்னும் ஒரு சில நாட்களில் விசா முடிந்து அமெரிக்கா செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X