திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கடந்த, 22 ம் தேதி வலது கண்ணில் வெளிச்சம் குறைவாக இருப்பதாக, சிறுமியை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவை சிகிச்சை செய்ய. மருத்துவர்கள் முடிவு செய்தனர்.கண் மருத்துவத்துறை தலைவர் (பொறுப்பு) சுரேஷ்பாபு, டாக்டர் சத்யா, மயக்கவியல் துறை தலைவர் பூங்குழலி, டாக்டர் ராதா, உதவி பேராசிரியர்கள் பாலசுப்ரமணியம், செல்வக்குமார் அடங்கிய குழுவினர், 27ம் தேதி சிறுமிக்கு அதிநவீன மருத்துவ கருவிகள் உதவியுடன் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டு, செயற்கை லென்ஸ் பொருத்தினர். தற்போது சிறுமி நலமுடன் உள்ளார்.ஐந்து வயது சிறுமிக்கு வெற்றிகரமாக கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டு, செயற்கை லென்ஸ் பொருத்திய டாக்டர் சத்யா மற்றும் மருத்துவ குழுவினரை மருத்துவ கல்லுாரி டீன் முருகேசன், தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.