திருப்பூர்: அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர், அலுவலர் பணியிடங்கள் நிரப்பபடும் என த அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து, மாநிலத்தில் எட்டு கோட்டம், அவற்றின் கீழ் உள்ள மண்டலம், கிளைகளில் எவ்வளவு பணியிடம் காலியாக உள்ளது என்ற விபரம் கேட்கப்பட்டுள்ளது. துணை மேலாளர், வணிக மேலாளருக்கு இதுகுறித்து மேலாண்மை இயக்குனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கோவை கோட்டத்தின் கீழ் திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை உட்கோட்டங்கள் உள்ளன. திருப்பூர் மண்டலத்தில் காங்கயம், தாராபுரம், பழநி ஒன்று மற்றும் இரண்டு, திருப்பூர் ஒன்று மற்றும் இரண்டு, பல்லடம் ஆகிய ஏழு கிளைகள் உள்ளன..இவற்றில் தற்போதுள்ள பஸ்கள், டிரைவர், நடத்துனர், மாற்று பணிக்கு வரும் டிரைவர், நடத்துனர், சிறப்பு, டவுன், சர்வீஸ் பஸ் இயக்கத்தின் போது பணியில் ஈடுபடுவோர், இயக்க, கண்காணிப்பு குழு, தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, டிச., முதல் வாரம் பட்டியலாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.