மதுரையில் வாகன சோதனையின்போது பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது; ஏ.டி.எம். கார்டை பறித்து ரூ.30 ஆயிரம் எடுத்ததாகவும் புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
00:46

மதுரை : மதுரை நகரில் இரவு வாகன சோதனையின்போது பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக திலகர்திடல் குற்றப்பிரிவு போலீஸ்காரர் முருகன் 41, நேற்று கைது செய்யப்பட்டார்.



பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வந்தவரிடம் ரூ.11 ஆயிரம் பறித்ததோடு, ஏ.டி.எம்., கார்டை பறித்து ரூ.30 ஆயிரம் எடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை வில்லாபுரம் மகேஷ் 42, பைப் கடை வைத்துள்ளார். இவரது கடையில், விவகாரத்து ஆன 25 வயது பெண் வேலை செய்கிறார். கடந்த சனிக்கிழமை இரவு மகேஷ், அவரது நண்பர்களுடன் அப்பெண் செல்லுாரில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பினார்.



இரவு 2:30 மணிக்கு டவுன் ஹால் ரோடு பகுதியில் மகேஷ், அப்பெண் உட்பட மூவர் டூவீலரில் வந்தனர். அவர்களை திலகர்திடல் குற்றப்பிரிவு போலீஸ்காரர் முருகன் உட்பட 2 போலீசார் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக மூவரும் பதில் தெரிவித்ததால் சந்தேகம் ஏற்பட்டது.



இதைதொடர்ந்து சக போலீஸ்காரரை ரயில்வே ஸ்டேஷன் அவுட்போஸ்ட்டிற்கு அனுப்பிவிட்டு முருகன் மட்டும் விசாரித்தார். அப்பெண்ணை, 'விசாரிக்க வேண்டும்' என்றுக்கூறி மிரட்டினார். பயந்த மகேஷிடம் ரூ.11 ஆயிரத்தை பறித்தவர் ஏ.டி.எம்., கார்டு, அலைபேசியையும் பறித்துக்கொண்டு அவரையும், நண்பரையும் மிரட்டி அங்கிருந்து அனுப்பினார்.



விடுதியில் பலாத்காரம்



பின்னர் அப்பெண்ணிடம் 'உன் நடத்தை குறித்து வீட்டில் தெரிவித்துவிடுவேன்' என மிரட்டி அப்பகுதி விடுதிக்கு அழைத்துச் சென்றார். 'இவர் என் உறவினர். கொஞ்சம் 'பிரஷ்' ஆகி செல்ல வேண்டும்' எனக்கூறி விடுதியில் 'ஓசி' அறை பெற்று பலாத்காரம் செய்தார்.



இருநாட்களாக இதுகுறித்து அப்பெண் யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். கடைக்கு நேற்றும் அவர் வராததால், மகேஷ் சென்று விசாரித்தபோதுதான் நடந்த சம்பவம் தெரிய வந்தது. இதற்கிடையே இருநாட்களாக மகேஷ் ஏ.டி.எம்., கார்டில் இருந்து மொத்தம் ரூ.30 ஆயிரம் எடுத்ததாக எஸ்.எம்.எஸ்., வந்தது.



அதிர்ச்சியுற்ற அவர், உடனடியாக அப்பெண்ணுடன் நேற்று திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் ரவீந்தரநாத் விசாரித்தார். பலாத்கார வழக்கில் முருகனை அனைத்து மகளிர் தெற்கு போலீசார் கைது செய்தனர். பணியின்போது பெண்ணை பலாத்காரம் செய்து போலீஸ் துறைக்கே களங்கத்தை ஏற்படுத்திய முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X