மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரி சண்முகம். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கறம்பக்குடி அருகே முல்லன்குறிச்சியில் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி உள்ளது.
இங்கு பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்க வேண்டும். தேவையான வகுப்பறைகள், அறிவியல், கம்ப்யூட்டர் ஆய்வகத்திற்கு உபகரணங்கள், சுற்றுச்சுவர், கழிப்பறை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு சண்முகம் மனு செய்தார். நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, பி.வேல்முருகன் அமர்வு: இதில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், புதுக்கோட்டை கலெக்டர் ஜன. 5ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.