கொட்டாம்பட்டி பகுதியில் வறண்ட கண்மாய்கள்: பொதுப்பணித்துறை அலட்சியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
01:01

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி, உதினிபட்டிக்கு செல்லும் கால்வாய் துார்வாரப்படாததால் கண்மாய்கள் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.இப்பகுதி விவசாயம் திண்டுக்கல் கரந்தமலையில் உருவாகும் பாலாறு தண்ணீரை நம்பி உள்ளது.



இந்நீரை தேக்கி பயன்படுத்த பள்ளபட்டி அருகே கொட்டாங்குளத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இங்கிருந்துகொட்டாம்பட்டி கண்மாய்க்கு செல்லும் கால்வாயில் பொன்னாங்குழி என்னுமிடத்தில் இருந்து பிரியும் உதினிபட்டிக்கு செல்லும் மண் கால்வாய்1800 மீட்டர் துாரம் துார்வாரப்படவில்லை.



அதனால் உதினிபட்டியில் 11 கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது.அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் அருண்: கால்வாயை துார் வாரினால்உதினிபட்டி கண்மாய்கள் நிறைந்து அதன் மூலம் 500 ஏக்கருக்கு மேல் பயன் பெறும். தவிர நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பொதுமக்கள், கால்நடைகள் குடிநீர் பற்றாக்குறை நீங்கும். தவிர தடுப்பணையில் உள்ள மணல் வெளியேறுவதற்காக கட்டப்பட்டுள்ள மணல்போக்கி ஷட்டரின்கீழ் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உடைத்து தண்ணீரை கொண்டு செல்கின்றனர்.



மதுரை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டுகிடப்பதால் பொதுப்பணித்துறையினர் கால்வாயை துார்வாரி உதினிப்பட்டிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.செயற்பொறியாளர் பவள கண்ணன்: மணல்போக்கி ஷட்டரின் கீழ் பகுதியை உடைத்து தண்ணீர் கொண்டு செல்வது மற்றும் உதினிபட்டிக்கு தண்ணீர் வராதது குறித்து உடனடியாக ஆய்வு செய்யப்படும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
30-நவ-202115:19:15 IST Report Abuse
sridhar நாடு முழுவதும் மழை வெள்ளம் அப்படீன்னு சொல்றீங்க இது எப்படி
Rate this:
Cancel
30-நவ-202110:02:08 IST Report Abuse
அப்புசாமி கண்மாய் படத்தைப் பாருங்க... ஒரே முள்ளுப் புதர். அதைப்பாத்து வர்ர தண்ணியும் வராம போய்டும்... முதல்ல கண்மாய் முள்ளுச் செடிகளை வெட்டுங்க... பிறகு நீங்களே தூர்வாருங்க. அரசாங்கம் இருப்பதே ஆட்டையப் போடத்தான். புரிஞ்சிக்கிட்டு சூதனமா நடந்துக்கோங்க. இன்னிக்கே வேலையை ஆரம்பிங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X