வரவு எட்டணா.. செலவு பத்தணா; பல்கலை வாகனங்களால் வீண் செலவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
01:36


மதுரை : மதுரை காமராஜ் பல்கலை நிதிப்பற்றாக்குறையால் தத்தளிக்கும் நிலையில் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களால் ஏற்படும் வீண் செலவை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



மதுரை நகர் பகுதிகளில் இருந்து நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பல்கலைக்கு பேராசிரியர் மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்கள் சென்று வர ஆறு பஸ்கள், இரண்டு வேன்கள் இயக்கப்படுகின்றன.



நகரில் வசிக்கும் ஒரு உதவி பேராசிரியருக்கு மாதம் ரூ.700, ஒரு நிரந்தர பணியாளருக்கு ரூ.300, தற்காலிக மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஒருவருக்கு ரூ.100 மாதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விற்கும் விலைக்கு ஒரு வாகனத்திற்கு பராமரிப்புடன் மாதம் ரூ. 40 ஆயிரம் வரை செலவாகிறது.



இதுதவிர டிரைவர், நடத்துனர்களுக்கான சம்பளமும் பல்கலை வழங்குகிறது. ஆனால் வாகனங்களில் இருந்து கிடைக்கும் வருவாயோ மிகக்குறைவு. பல்கலை பணியாளர் நலன் கருதி வாகனங்கள் இயக்கப்பட்டாலும் ஓரளவு சலுகை வழங்குவது தான் ஏற்கத்தக்கது. சம்பளம் வழங்கவே நிதிப்பற்றாக்குறையில் பல்கலை தத்தளிக்கும் போது இதுபோன்ற செலவினங்களை கட்டுப்படுத்தினால் 'வரவு எட்டணா செலவு பத்தணா' என்பதை பல்கலை தவிர்க்கலாம்.



தேவையா தனி கார்



பல்கலை நிதி அலுவலர், தேர்வாணையாளர், டீன், பொறியாளர் உள்ளிட்டோர் தனியாக பல்கலை காரை பயன்படுத்துகின்றனர். சிலர் காலை பல்கலை வந்து மதிய உணவுக்கு வீடு சென்று பல்கலை திரும்பி மாலை மீண்டும் வீடு செல்கின்றனர்.



இதற்காக பல்கலை சார்பில் பெட்ரோல், டீசல் வீணாக நிரப்பி செலவு ஏற்படுகிறது. கார் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட அதிகாரிகள் மட்டும் பல்கலை காரை பயன்படுத்த பதிவாளர் வசந்தா அனுமதிக்க வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X