குட்டத்துப்பட்டி ஊராட்சியில் சுகாதாரம் இல்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
01:50

கன்னிவாடி : கன்னிவாடி அருகே குட்டத்துப்பட்டி ஊராட்சியில் சுகாதாரக் கேடான சூழலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.



ஒவ்வொரு கிராமத்திலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இருந்தும் வசதிகளில் பின்தங்கியே உள்ளன. தண்ணீர், சாக்கடை, ரோடு வசதி இவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. சுகாதார சூழல் இன்றி தொற்று பாதிப்பால் பலரும் சிரமப்படுகின்றனர். பொது மக்கள் கருத்து:பாலம் சேதம் அடைந்துள்ளதுகார்த்திக், பா.ஜ., ஒன்றிய நிர்வாகி, காலாடிபட்டி: வீடு தோறும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் பெயரளவில் கூடசெயல்பாட்டில் இல்லை.




ஆவரம்பட்டி, மைலாப்பூரில் தண்ணீருக்காக பெண்கள் குடங்களுடன் காத்திருக்கின்றனர். சாக்கடை தேங்கி சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் பிடிக்கின்றனர். அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் பராமரிப்பின்றி மண் நிரவியுள்ளது. பல இடங்களில் அசுத்த நீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. அன்னைநகர், குஞ்சனம்பட்டி, புளியராஜக்காபட்டியிலும் இந்நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது. மைலாப்பூர் மெயின் ரோட்டில் இருந்து அணைப்பட்டி செல்லும் வழியில், பாலம் சேதமடைந்துள்ளது. போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மனு கொடுத்தும் பலனில்லைமோகன்ராஜ்(கூலித் தொழிலாளி, வெயிலடிச் சான்பட்டி): வெயிலடிச்சான்பட்டியில், ஆக்கிரமிப்புகள் அதிகம். அவசர காலங்களில் மருத்துவ தேவைக்கு செல்ல முடியாதளவிற்கு, ரோடு குறுகியுள்ளது. பல இடங்களில் குடிநீர் வினியோக குழாய் சேதமடைந்து, வீணாக வெளியேறுகிறது. கழிவுநீர் கால்வாய் இல்லாமல், மழைநீர் சாக்கடை தண்ணீருடன் வீடுகளை சூழ்ந்துள்ளது. புளியராஜக்காபட்டி துவங்கி கண்மாய்களுக்கான வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. ஒட்டு குளம், ராஜாக்குளம், வெயிலை கண்மாய்களுக்கு இதுவரை தண்ணீர் வரத்து இல்லை. முதல்வர், அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பலனில்லை.தொற்றுநோய் வாடிக்கைமுத்துசெல்வம், கூலித் தொழிலாளி, காலாடிபட்டி: காலாடிபட்டியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. மழைக் காலங்களில் இப்பகுதியில் சேகரமாகும் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்துள்ளது. தெருக்கள் சகதிக்காடாக மாறி, வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அசுத்த நீர் தேங்கி, கொசுத்தொல்லை அதிகரித்து, தொற்றுநோய் பாதிப்பும் வாடிக்கையாகிவிட்டது. இணைப்பு ரோட்டின் பெரும்பகுதி அரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், ரோடு பராமரிப்பில், ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.புதர்மண்டிய கலையரங்கம்சுமதிராஜ் (கல்லூரி மாணவர், நாச்ச கோணான் பட்டி): அவ்வப்போது அசுத்தம் கலந்த குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கலையரங்கம், பஸ் ஸ்டாப் பகுதியில் புதர் மண்டியுள்ளது. கொசு மருந்து தெளிப்பதில்லை. குப்பை கழிவுகள் அகற்றப்படாததால், துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு ஏற்படுத்துகிறது. பல இடங்களில் தெருவிளக்கு வசதி இன்றி விஷப்பூச்சிகளால் பலர் பாதிப்படைகின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X