தேனி : தேனி கலெக்டர் முரளீதரன் தலைமையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 230 மனுக்கள் பெறப்பட்டன.மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தவும், மனுக்களின் நிலை குறித்து 15 நாளில் மனுதாரருக்கு கூற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு காதொலி கருவி வழங்கினார். திருமண உதவித்தொகையாக 3 பேருக்கு ரூ.26 ஆயிரம் உள்பட 7 பேருக்கு ரூ.1,13,500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விமலாராணி, பிற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.