ஆனைக்குட்டத்தில் மேலும் ஒரு அணை; பருவமழை கண்காணிப்பு அலுவலர் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
03:26


சிவகாசி : ''ஆனைக்குட்டம் அணை அருகே விரைவில் மேலும் ஒரு அணை அமைக்க உள்ளதாக,'' வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் காமராஜ் தெரிவித்தார்.



இங்குள்ள அணை ஷட்டர்கள் பழுதால் மழை நீர் வந்த நிலையில் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பெரும் மழையிலும் 22 அடி கொண்ட அணையில் தற்போது 14 அடி நீரே உள்ளது. இதை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனரும் மாவட்ட வடகிழக்கு பருவமழை ஒருங்கிணைப்பு கண்காணிப்பு அலுவலர் காமராஜ், கலெக்டர் மேகநாத ரெட்டி அணையை ஆய்வு செய்தனர்.



அணையில் நீர் இருப்பு, ஷட்டர் , மதகு உறுதித்தன்மை, வரத்து கால்வாய்களை பார்வையிட்டனர்.காமராஜ் கூறியதாவது: அணையையொட்டி மேலும் ஒரு அணை அமைக்கவும், அணை உட்பகுதியில் உள்ள மேடுகளை சரிசெய்து சமதளமாக்க பரிந்துரைத்துள்ளோம். மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள், ஏரிகள், கண்மாய்கள் , நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.



நீர்வரத்து அதிகமாக இருந்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார். டி.ஆர்.ஓ.,மங்கள ராமசுப்பிரமணியன், தாசில்தார் ராஜ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் அழகுசுந்தரம் கலந்து கொண்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X