சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் கட்டப்படும் வணிக வளாகங்களில் இரு ,நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இன்றி கட்டடங்கள் கட்டப்படுவதால்,ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் நெரிசலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
விருதுநகர், சாத்துார், அருப்புக்கோட்டை , ஸ்ரீவில்லிபுத்துரர், சிவகாசி திருத்தங்கல், ராஜபாளையம் உள்ளிட்ட நகராட்சி பகுதி, பேரூராட்சி , ஊராட்சி பகுதிகளில் புதிய வணிக வளாக கட்டடங்கள் பல கட்டப்படுகின்றன.
இங்கு இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதிகள் ஏற்படுத்துவதில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியின்றி ரோட்டில் நிறுத்திவிட்டு வணிக வளாகங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.இதனால் மெயின் ரோடு ,வணிக வளாகங்கள் உள்ள தெருக்களில் வாகன நெரிசல் ஏற்படுவதோடு அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு மீட்பு வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.சிறியது முதல் பெரியது வரையிலான வணிக வளாகங்கள் ,திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் கட்டப்படும் போதே அங்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் கண்காணித்த பின்னரே கட்டடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்.
இதன் மூலம் வரும் காலங்களில் அவசியமின்றி ரோடுகளில் வாகனங்களை நிறுத்துவதும், போக்கு வரத்து நெரிசலும் குறையும்
.கயிறு அடித்து இடம் ஒதுக்கலாம்கடந்த காலங்களில் மெயின் ரோடு, முக்கிய வணிக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட் பகுதிகள் ஒன்வே ஆக்கப்பட்டது. போக்குவரத்து போலீசாரும் ரோட்டில் இரு சக்கர , நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்காக ரோடு ஓரம் கயிறு அடித்து இடம் ஒதுக்கினர். இது போன்ற நடவடிக்கை மூலம் போக்குவரத்து இட நெரிசலுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வனராஜ், சமூக ஆர்வலர் ,சாத்துார் .................