பணம் மோசடி வழக்கு விழுப்புரம் பெண் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பணம் மோசடி வழக்கு விழுப்புரம் பெண் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 நவ
2021
04:52

விழுப்புரம்-விழுப்புரத்தில், ஏலச்சீட்டு நடத்தியும், கடன் வாங்கியும் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் இந்திரா பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி கோமதி, 45; கடந்த 2018ம் ஆண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.இவர், ஒரு லட்சம் ரூபாய் மற்றும் 3 லட்சம் ரூபாய் என ஏலச்சீட்டு நடத்தினார். இவரிடம், 50க்கும் மேற்பட்டோர் பணம் கட்டியுள்ளனர். ஏலச்சீட்டு 2019ம் ஆண்டு முடிந்த நிலையில், ஏலம் எடுத்தோருக்கு பணம் தராமல் மாதம் தோறும் அதற்கான வட்டி மட்டும் வழங்கி வந்துள்ளார்.மேலும், சாலாமேடு, சர்வேயர் நகரைச் சேர்ந்த பெருமாள் மனைவி லதா என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். லதா தனக்குத் தெரிந்த சிலரிடம் 2 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி 2019 அக்., 9 மற்றும் நவ., 10ல் 3 லட்சம் ரூபாய் என கோமதியிடம் கொடுத்துள்ளார்.பணத்தை திரும்பத் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கும் பணம் தராமல் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.இதுகுறித்து லதா நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி., இருதயராஜ் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார், கோமதி மீது வழக்குப்பதிந்து, நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே அவரை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X