திண்டிவனம்-தொடர் மழையால் திண்டிவனம் அருகே அங்கன்வாடி மைய கட்டடம் இடிந்து சேதமானது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உதயம் நகரில் சேதமடைந்த வாடகைக் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு உதயம் நகர், டி.வி.நகர் பகுதி சிறுவர்கள் 30 பேர் படிக்கின்றனர்.புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டர், உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை 8:00 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்தது. அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.