நெல்லிக்குப்பம்-தொடர் மழை காரணமாக நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில் குளத்தில் உள்ள விநாயகர் சிலை நீரில் மூழ்கும் நிலையில் உள்ளதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் எதிரே குளத்தின் நடுவே மண்டபத்தில் விநாயகர் சிலை உள்ளது. இச்சிலை தண்ணீரில் மூழ்கினால் உலகம் அழிந்து விடும் என்று பக்தர்கள் சிலர் கூறி வருகின்றனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வளவு மழை பெய்தும் விநாயகர் சிலை முழுதும் தண்ணீரில் மூழ்கியது இல்லை. சில தினங்களாக பெய்யும் கனமழையால் விநாயகர் சிலை மூழ்கும் நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். விநாயகர் சிலையை ஏராளமான பக்தர்கள் பார்த்துச் செல்கின்றனர். விநாயகர் சிலை முற்றிலும் மூழ்க கூடாது என கோவிலில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.