'மழை வெள்ள பாதிப்பை தவிர்க்க வெள்ள நிவாரண முகாம்: தமிழிசை ஆய்வு | செய்திகள் | Dinamalar
'மழை வெள்ள பாதிப்பை தவிர்க்க வெள்ள நிவாரண முகாம்: தமிழிசை ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 நவ
2021
05:04

புதுச்சேரி,-தொடர் கனமழையால் கருவடிக்குப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, மாருதி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாமை கவர்னர் தமிழிசை நேற்று பார்வையிட்டார்.



நிவாரண முகாமில் தங்கி இருப்பவர்களிடம் நலம் விசாரித்த கவர்னர், அவர்களுக்கு உணவு வழங்கி, உடன் அமர்ந்து உணவருந்தினார். பின்னர் அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்முகாமில், சிறுமி துகிராவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, செவிலியராக வர வேண்டும் என்ற அவரது விருப்பத்தைக் கேட்டு நெகிழ்ந்து, பாராட்டினார். குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கினார்.கவர்னர் தமிழிசை கூறியதாவது:மத்திய குழுவிடம் மழை பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை தெரிவித்து வருகிறோம். புதுச்சேரிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அடுத்த முறை மழை வெள்ளம் வருவதற்கு முன், உள்கட்டமைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.மழை வெள்ளத்தால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி பாதிக்கப்படக் கூடாது. நுாறு சதவீத தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். சில நாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் கொரொனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகரிக்க இன்று (30ம் தேதி) சுகாதாரத் துறையுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.சில நாடுகளில் இரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுற்றுலாத் தலம் என்பதால் புதுச்சேரியிலும் அத்தகைய நிலை ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X