புதுச்சேரி-'துாய்மை இந்தியா' தொடர்பான போட்டிகளில் பொது மக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.புதுச்சேரி நகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் நகரங்களின் துாய்மை பற்றிய கணக்கெடுப்பு நடந்து வருகிறது.இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் பொதுமக்களும் பங்கேற்கும் விதமாக, புதுச்சேரி நகராட்சி பல்வேறு விதமான இணையவழி போட்டிகளை நடத்த உள்ளது.தூய்மை இந்தியா, தொடர்பாக, ஓவியம், குறும்படம். ஒலிவழி தகவல்கள், சுவரோவியங்கள், வர்ணங்கள் தயார் செய்து 9443958969, 9444247219 என்ற வாட்ஸ் ஆப் எண்களுக்கு வரும் 12ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இந்த படைப்புகள் திறந்தவெளி கழிப்பிடமில்லா புதுச்சேரி, குப்பைகளை மக்கும், மக்காதவை என பிரித்து கொடுத்தல், நீர்நிலைகள், தெருக்கள், காலிமனைகளில் குப்பைகளை வீசாமல் இருத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் போன்ற தலைப்பில் இருத்தல் வேண்டும்.ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த மூன்று படைப்புகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 9443958969, 9444247219 மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.