அரியாங்குப்பம்-தண்ணீர் கொதிக்க வைக்கும் ஹீட்டரை தொட்ட 7 வயது சிறுமி மின்சாரம் தாக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததார்.அரியாங்குப்பம் மணவெளி, சண்முகா நகரை சேர்ந்தவர் ரியாத் அலி,42; எலக்ட்ரீஷியன். இவரது மகள் பாசிலா, 7; அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த 26ம் தேதி வீட்டில் தண்ணீர் கொதிக்க வைக்க மின்சார ஹீட்டரை போட்டுள்ளனர். தெரியாமல் ஹீட்டரை தொட்ட சிறுமி, மின்சாரம் தாக்கி துாக்கியெறிப்பட்டார். அத்துடன் வெந்நீரும் சிறுமியின் உடலில் கொட்டியது.இதில் படுகாயமடைந்த சிறுமி அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அரியாங்குப்பம் ஏட்டு அன்பரசன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.