அவலுார்பேட்டை-மேல்மலையனுார் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லுாரி மாணவரை 2ம் நாளாகதேடும் பணி நடந்தது.மேல்மலையனுார் அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் கோதண்டராமன்,18; திண்டிவனம் அரசு கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர், நேற்று முன்தினம் மதியம்மேல்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை தரைப்பாலத்தின் அருகே நண்பர்களுடன் குளித்தார். அப்போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தேடியும் கிடைக்கவில்லை. 2ம் நாளாக நேற்றும் தேடினர். மாலை 6:00 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை.தேடும் பணியை அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார்.