செஞ்சி-விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது.வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் அறிக்கை:விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று 30ம் தேதி மாலை 5:00 மணியளவில் மாவட்ட அவைத் தலைவர் நமச்சிவாயம் தலைமையில், திண்டிவனம் எல்.கே. டவரில் நடக்கிறது.இதில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.