ராயநல்லுார் சாலை துண்டிப்பு: | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ராயநல்லுார் சாலை துண்டிப்பு:
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 நவ
2021
05:33

மரக்காணம்-மரக்காணம் அடுத்த ராயநல்லுார் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. வருவாய்த் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் தேங்கி நிற்கும் மழைநீரை ஜே.சி.பி., மூலம் தற்காலிக வாய்க்கால் எடுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மரக்காணம் அடுத்த அசப்பூர் மற்றும் ராயநல்லுார் கிராமத்திற்கு இடையே செல்லும் சாலை மற்றும் தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் இந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால், இந்த கிராமங்களைச் சுற்றுயுள்ள நாவல்பாக்கம், நல்லம்பாக்கம், பந்தாடு, ஆவணிபூர், கம்பூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.மேலும், வெள்ள நீர் 100 ஏக்கர் பரப்பளவிலான நெல், வேர்க்கடலை போன்ற விவசாய பயிர்களை மூழ்கடித்துள்ளது.மரக்காணம் தாசில்தார் சரவணன் அந்த பகுதியை ஆய்வு செய்தார். அப்போது, துண்டிக்கப்பட்ட சாலையை சீரமைத்து, மேம்பாலம் அமைக்க வேண்டும். சாலையின் அருகே உள்ள கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X