20,000 ஏக்கர்: மழையால் பாதித்த நெல், கரும்பு, சோளம் பயிர்கள்...பாரபட்சமின்றி நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
05:36

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் மரவள்ளி, மஞ்சள், கருணை மற்றும் சேனைக் கிழங்கு, கத்ரிக்காய், மிளகாய், கொய்யா உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும், நெல், கரும்பு, வேர்க்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து பயிரிட்டு வருகின்றனர்.



இதுதவிர மாம்பழம், முருங்கை, பப்பாளி உள்ளிட்டவைகளையும் பயிரிட்டுள்ளனர்.கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால், மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 335 ஏரிகளில் 299 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 76 சதவீதத்திற்கு மேல் 29 ஏரிகளிலும், 51 சதவீதத்திற்கு மேல் 7 ஏரிகளிலும் தண்ணீர் உள்ளது.மேலும், மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமாக உள்ள கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் நவம்பர் மாத தொடக்கத்திலேயே முழு கொள்ளளவை எட்டியது.தொடர்ந்து அணைகளுக்கு நீர் வரத்து இருந்ததால் 2 அணைகளில் இருந்தும் ஆறுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதனால் ஆற்றில் உள்ள பிரிவு வாய்க்கால் மூலம் அருகில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்றன.பெரும்பாலான கிராமங்களில் ஏரி உபரி நீர் குடியிருப்புகளிலும் விளை நிலங்களிலும் புகுந்து தேங்கியது. வடிகால் வசதியின்றி பயிர்கள் அழுகின.மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் மரவள்ளி, மஞ்சள், நெல், கரும்பு பயிர்களில் தண்ணீர் தேங்கியதால் அழுகி வீணானது. இதில் மரவள்ளி, மஞ்சள் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சேதமானதால், விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.சேதமடைந்த பயிர்களை பார்வையிடச் செல்லும் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், ஒரு எக்டேரில் 33 சதவீத பரப்பளவிலான பயிர்கள் பாதிப்படைந்திருந்தால் மட்டுமே, சேதமடைந்த பகுதியாக கணக்கெடுக்கப்படும் என கூறுகின்றனர்.



இதனால், தங்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.டெல்டா மாவட்டங்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகை அறிவித்தது போல, கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் நலன் கருதி பாரபட்சமின்றி அனைவருக்கும் நிவாரணத் தொகையை ஒரே மாதிரியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X