வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சாலை மறியல் | கடலூர் செய்திகள் | Dinamalar
வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சாலை மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 நவ
2021
05:40

நெய்வேலி-சென்னை -கும்பகோணம் நெடுஞ்சாலையில் நெய்வேலி ஆர்ச்கேட் அருகே வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பாதித்த மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.



விக்கிரவாண்டி - கும்பகோணம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியால் பயன்பாட்டில் இருந்த வடிகால் வாய்க்கால் முற்றிலும் மூடப்பட்டது. சில தினங்களாக பெய்யும் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கண்ணுத்தோப்பு ஓடைக்கு செல்ல வழியின்றி நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியை சுற்றியுள்ள வடக்குத்து ஊராட்சி மற்றும் இந்திரா நகர் ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பாதித்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வடக்குத்து ஊராட்சிக்குட்பட்ட நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே நேற்று காலை 8 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, மழைநீர் செல்ல வடிகால் வசதி செய்து தருவதாக கூறி சமாதானம் செய்தனர். போலீசார் கூறியதையேற்ற மக்கள் 8.30 மணியளவில்கலைந்து சென்றனர். உடனடியாக பொக்லைன் உதவியோடு தற்காலிகமாக வடிகால் வசதி செய்யும் பணி துவங்கியது. மறியல் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X