கடலுார்-கடலுாரில் மழைநீர் சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த மூதாட்டியை போலீசார் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.கடலுார் பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த மணியம்மை, 75; உடல் நலம் பாதித்திருந்தார். மழைநீர் சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தார். தகவலறிந்த பயிற்சி டி.எஸ்.பி., யாஸ்மின் தலைமையில் போலீசார் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.திருத்துறையூர் மலட்டாறில் குளிக்கச் சென்றவர்களை புதுப்பேட்டை போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர். ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் முன்பு குண்டும் குழியுமான சாலை இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் முன்னிலையில் சீரமைக்கப் பட்டது. கொளத்தங்குறிச்சி கிராமத்தில் சாலையில் தேங்கி நின்ற மழைநீர் வடிய ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வடிகால் வசதி ஏற்பாடு செய்தனர்.