பூண்டி ஏரியில் 25,000 கன அடி நீர் திறப்பு; வெள்ள அபாயத்தால் மணலி புதுநகரில் பீதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
06:29

மணலி புதுநகர்-பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டிருப்பதால், மணலிபுது நகர் உட்பட பல பகுதிகளை, மீண்டும் வெள்ள நீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி நீர்த்தேக்கம், 35 அடி உயரம் கொண்டது. இதில், 3.231 டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும். பருவ மழை துவங்கும் முன்பே, ஏரியில் போதுமான அளவிற்கு தண்ணீர் இருந்தது.வெள்ளப்பெருக்குநவ., முதல் வாரத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கி, இடைவெளி விட்டு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக, பூண்டியில் இருந்து 25 நாட்களுக்கும் மேலாக பல ஆயிரம் கன அடி உபரி நீர், கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.அதிகபட்சமாக, சில தினங்களுக்கு முன், வினாடிக்கு, 38 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மணலிபுது நகர், விச்சூர் போன்ற பகுதிகளில் ஆறுடன் இணையும் கால்வாய் வழியாக, நீர் பின்னோக்கி ஏறி, குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது.கரை பலவீனம் காரணமாக, வடிவுடையம்மன் நகர், ஜெனிபர் நகர், எம்.ஆர்., நகர் போன்ற பகுதிகளை, வெள்ளநீர் மூழ்கடித்தது.கொசஸ்தலை ஆற்றில் ஆர்ப்பரித்த வெள்ளநீர், எண்ணுார் முகத்துவாரம் செல்லும் முன், சடையங்குப்பம் அருகே, புழல் உபரி நீருடன் சங்கமிக்கும். புழல் உபரி கால்வாயில் பின்னோக்கி ஏறிய உபரிநீர், சடையங்குப்பம், பர்மா நகர் பகுதிகளை சூழ்ந்தது.அச்சத்தில் மக்கள்தற்போது மழை நின்று உபரி நீர் திறப்பும் குறைக்கப்பட்டதால், வெள்ளநீர் தேங்கிய பகுதிகளில் வடிந்து, மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பியது.இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதியால், இரு தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருவதால், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.



இதன் காரணமாக, நேற்று மதியம் நிலவரப்படி, 14 மதகுகள் வழியாக பூண்டி ஏரியில் இருந்து, 25 ஆயிரம் கன அடி உபரி நீர், கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படுகிறது.நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், நீர் திறப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மணலிபுது நகர், சடையங்குப்பம், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் வெள்ளநீர் சூழ கூடும் என, அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X