ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
06:36

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் பாலாற்று வெள்ளத்தில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அடித்து செல்லப்பட்டதால், தற்போது ஆழ்துளை கிணறு அமைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுஉள்ளனர்.வடகிழக்கு பருவ மழை மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கன மழையால், காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.காஞ்சிபுரம் மக்கள் குடிநீர் தேவைக்காக ஆற்றில் புதைக்கப்பட்ட குழாய்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.இதனால் செவிலிமேடு, ஜெம் நகர், சின்னய்யன் நகர், வேதாச்சலம் நகர், பல்லவன் நகர், அரசு ஊழியர்கள் குடியிருப்பு போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது.கடந்த, 10 நாட்களுக்கு மேல், இப்பகுதி மக்கள், பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.பல்லவன் நகர் மக்கள் கூறியதாவது:பாலாற்று தண்ணீர் தான் குடிப்பதற்கு நன்றாக இருக்கும். இதனால் பல்லவன் நகர் பொது குழாயில் குடிநீர் பிடிக்க எப்போதும் கூட்டம் இருக்கும்; அருகாமை நகரைச் சேர்ந்தோரும் தண்ணீர் பிடிக்க வருவர்.குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்ட பின் 20 லிட்டர் தண்ணீர் கேன் வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆற்றில் தண்ணீர் செல்கிறது என்றால், அதற்கு மாற்று ஏற்பாடு கிடையாதா? 10 நாட்களுக்கு மேல் தண்ணீர் வரவில்லை. அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்காதது, அதிகாரிகளின் மெத்தனப்போக்கை காட்டுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகராட்சி பொறியாளர் கணேசன் கூறியதாவது: ''ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு இடம் தேர்வு நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், எத்தனை ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கலாம் என முடிவு செய்யப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X