ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை ஊழியர் கைது..
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
06:39

காஞ்சிபுரம்-வரதட்சணை வழக்கில், ஒருவருக்கு சாதகமாக அறிக்கை வழங்குவதற்காக, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலக ஊழியரை, லஞ்ச ஒழிப்பு துறையினர், நேற்று கைது செய்தனர்.தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் மனைவி அர்ச்சனா. வரதட்சணை பிரச்னை காரணமாக, தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் அர்ச்சனா புகார் அளித்தார்.போலீசார், காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலரை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.இதையடுத்து, சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட கிருஷ்ணபிரசாத்திடம், 'உங்களுக்கு சாதகமாக அறிக்கை வழங்க வேண்டுமானால் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும்' என துறை அலுவலர்கள் கேட்டுள்ளனர்.அதில் முதல் தவணையாக 25 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் அலுவலகம் வெளியில், சமூக நலத்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கும் தொகுப்பு ஊதிய ஊழியர் பிரேமா, 40, என்பரிடம், கிருஷ்ணபிரசாத் பணம் கொடுத்தார்.அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர், கையும் களவுமாக பிரேமாவை பிடித்தனர். விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதியானதை அடுத்து, பிரேமாவை கைது செய்தனர்; மேலும் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X