சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் எஸ்.ஐ,, ரவிசந்திரன் மற்றும் போலீசார், ஆலத்துக்கோம்பை செம்படாபாளையம் பிரிவு அருகே, நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு மொபட்டில், தலா இரண்டு சாக்குப்பைகளில் மணல் கடத்தி வந்த இருவரை பிடித்தனர். விசாரணையில் சதுமுகை, செம்படாபாளையத்தை சேர்ந்த சிவக்குமார், 47, முருகேசன், 37, என்பதும், பவானி ஆற்றில் மணல் கடத்தி, விற்பனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர். இருவரையும் கைது செய்து, சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரும் கடத்தி சேர்த்து வைத்த மணலை, வாகனத்தில் ஏற்றி தாசில்தார் அலுவலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.