மாநில காங்., தலைவர் பதவி கனவு: ஜோதிமணியின் தொடரும் 'காமெடி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
10:41

கரூர்: மாநில தலைவர் பதவிக்காக தொடர்ந்து காமெடி போராட்டத்தில், கரூர் காங்.,-எம்.பி., ஜோதிமணி ஈடுபட்டு வருவது காங்., தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


கரூர் லோக்சபா தொகுதி காங்.,- எம்.பி., ஜோதிமணி. இவர், 2011ல் கரூர் சட்டசபை, 2014ல் கரூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2019ல், தி.மு.க., கூட்டணியில் கரூர் எம்.பி.,யாக வெற்றி பெற்றார். அதுமுதல், தி.மு.க., நடத்திய ஆர்ப்பாட்டம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து, தி.மு.க., பெயரை கேட்டாலே தக்காளி போல் முகம் காட்டும் ஜோதிமணி, தி.மு.க., நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். இது மட்டுமல்லாமல், 'காங்., தலைமையின் கவனம் தன் மீது திரும்ப வேண்டும்' என, அடிக்கடி காமெடி போராட்டங்கள் நடத்துகிறார்' என, உள்ளூர் காங்கிரசார் புலம்புகின்றனர். கடந்த, 2016ல் அரவக்குறிச்சியில், தி.மு.க., சார்பில் கே.சி.பழனிசாமி போட்டியிடுவது உறுதி என்ற நிலையில், காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்க வேண்டும் என, சமூக வலைத்தளத்தில் ஜோதிமணி யுத்தம் நடத்தினார். அப்போதைய, காங்., மாநில தலைவர் இளங்கோவன் எச்சரிக்கைக்குப் பின் அமைதியானார்.


கடந்த 2019ல் எம்.பி., யாக வெற்றி பெற்ற பின், 2019 ஆகஸ்ட், 10ல் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த கோரி, கரூர் நகராட்சி கமிஷனர் அறையில் ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கடைசியாக, 'கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்' என்று கூறி, போராட்டத்தை விலக்கி கொண்டார். கடந்த, பிப்.,20ல், 'கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானாவில் காந்தியின் பழைய சிலையை மீண்டும் வைக்க வேண்டும்; கட்டுமானம் சரியில்லை' எனக்கூறி, தர்ணா நடத்தினார். அவரின், 'நாடக' போராட்டத்தை காங்கிரசார் புறக்கணித்ததால், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்களை இரவல் வாங்கியே போராட்டம் நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். போராட்டத்தின் போது போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால், சமூக வலைதளங்களில் தன் வீடியோவை வெளியிட்டு ஆறுதல் தேடிக்கொண்டார். தற்போது, காங்., கட்சியின் கூட்டணி கட்சியான, தி.மு.க., ஆட்சி நடந்தாலும், ஜோதிமணியின் காமெடி தர்பார் குறைந்தபாடில்லை. கடந்த, 24ல், 'மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம் நடத்த கரூர் கலெக்டர் பிரபுசங்கர் அனுமதி மறுக்கிறார்' என தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். 24 மணி நேரம் நடத்திய போராட்டத்தை உள்ளூர் அமைச்சர் மட்டுமல்லாது, காங்., தலைமை கூட கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதனால், 'தமிழகத்தின் சீனியர் மந்திரிகள் தன்னை தொடர்பு கொண்டு பேசினர்' என, கூறி போராட்டத்தை விலக்கி கொண்டார். இவர் நடத்திய எந்த போராட்டத்திலும் இறுதி முடிவு கிடைத்ததே இல்லை.


உள்ளூரில் அடிப்படை பிரச்னைகளுக்காக மக்கள் போராட்டம் நடத்தும் போது, 'உள்ளூர் எம்.பி., ஜோதிமணியை காணவில்லை; ஜோதிமணியை கண்டு பிடித்து தாருங்கள்' என கோஷம் எழுப்புவது இன்று வரை தொடர்கிறது. இதை மறைப்பதற்காக அவ்வப்போது போராட்டம், உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, தன்னை முன்னிலைப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஜோதிமணி.


ஆனால், தற்போது மாநில காங்., தலைவர் பதவியை பிடிக்க, தலைமையின் கவனத்தை ஈர்க்கவும், தன்னை முன்னிலைப்படுத்தவும் போராட்டங்களை நடத்தி வருகிறார். இதுபோன்ற போராட்டங்கள், தி.மு.க., தரப்பில் எரிச்சலையும், காங்., தரப்பில் தர்மசங்கடத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. காங்., இளம் தலைவர் ராகுல், தனக்கு நல்ல பரீட்சியம் எனக்கூறி வரும் ஜோதிமணி, மாநில தலைமைக்கு ஏதாவது ஒரு வகையில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், 'காமெடி' போராட்டங்களை நடத்துவது வாடிக்கையாகி விட்டது என புலம்புகின்றனர் உள்ளூர், காங்., பிரமுகர்கள்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X