100 மில்லியன் டாலர் அளவுக்கு வருவாய்: ஓசூரில் 2வது யூனிட்டை துவங்க 'ஏத்தர் எனர்ஜி' ஆயத்தம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
10:42

ஓசூர்: ஓசூரிலுள்ள 'ஏத்தர் எனர்ஜி' நிறுவனம், 100 மில்லியன் டாலர் அளவுக்கு வருவாயை எட்டிய நிலையில், தன் இரண்டாவது யூனிட்டை துவங்க ஆயத்தமாகி வருகிறது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளியில், மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு செய்யும், 'ஏத்தர் எனர்ஜி' நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும், '450 பிளஸ்' மற்றும் '450 எக்ஸ்' ஆகிய இரு மாடல்கள், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே, அகமதாபாத், சென்னை, கோவை, திருச்சி, கொச்சி உட்பட, 27க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விற்பனை சூடுபிடிக்க துவங்கிய நிலையில், கடந்த அக்., மாதம் வரை, கடந்த ஆண்டை விட, 12 மடங்கு அதிகமாக, 100 மில்லியன் டாலர் அளவிற்கு வருவாய் எட்டியுள்ளது. அதன்படி, மிகப்பெரிய மின்சார வாகன தயாரிப்பாளராக, 'ஏத்தர் எனர்ஜி' நிறுவனம் திகழ்கிறது. இந்நிலையில், ஓசூரில் தன் இரண்டாவது யூனிட்டை விரைவில் துவங்க உள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு நான்கு லட்சம் வாகன உற்பத்தி இலக்கை எட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


இது தொடர்பாக அந்நிறுவன இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தருண் மேத்தா வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் காலாண்டுகளில் எங்களது சில்லரை வர்த்தகம், ஆறு மடங்கு வளர்ச்சியடையும். ஓசூரில் நிறுவனம் துவங்கப்பட்டு, 10 மாதங்களுக்குள், நாங்கள் ஏற்கனவே முழு திறனுடன் செயல்படுவதை காண்கிறோம். தயாராக இருக்கும் இரண்டாவது ஆலையை நாங்கள் இயக்க இருக்கிறோம். இந்த திறன் விரிவாக்கத்தின் மூலம், அடுத்த ஆண்டுக்குள் நாட்டின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக ஆக தயாராகி வருகிறோம். செயல்பாட்டு திறன் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்த, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 650 கோடி ரூபாய் முதலீடு செய்ய நிறுவனம் உறுதியளித்துள்ளது. மார்ச், 2023க்குள், 100 நகரங்களில், 150 மையங்களை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X