கேரளா போல் தமிழகத்தில் சரக்கு வாகன வாடகையை அரசே நிர்ணயிக்க லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
10:45

சேலம்: 'கேரளாவை போல் தமிழகத்தில் வாகனங்கள் அனைத்துக்கும் மோட்டார் வாகன சட்டத்தின் படி, மத்திய அரசு வழங்கியுள்ள அதிகாரத்தின் படி, குறைந்த, அதிகபட்ச வாடகையை நிர்ணயம் செய்யவும், இதற்காக உயர்மட்ட குழு அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாசலம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் அனுப்பி உள்ள கோரிக்கை மனு: மத்திய அரசின் இந்திய மோட்டார் வாகன சட்டம், மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் சிறிய வாகனம் முதல், கனரக வாகனங்கள் வரை, அனைத்து வாகனத்துக்கும் குறைந்தபட்ச வாடகை, அதிகபட்ச வாடகையை நிர்ணயம் செய்ய முழு அதிகாரம் வழங்கி உள்ளது. இதனடிப்படையில் தமிழக அரசும் உயர்மட்டக்குழு, ஆணையம் அமைத்து வாகனங்களுக்கான வாடகை, இதர பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்த நாங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்களின் தோழமை அமைப்பான கேரளா மாநில வாகன உரிமையாளர்கள் கூட்டமைப்பு, வைத்த கோரிக்கையை ஏற்று கேரள மாநில அரசு தற்போது நீதிபதி ராமச்சந்திரன் தலைமையிலான ஆணையத்தை அமைத்து கேரளாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் வாடகையை நிர்ணயம் செய்யுமாறும், இதர பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்து மாறும் உத்தரவிட்டிருக்கிறது. கேரளாவைப் போல் தமிழகத்தில் மாநில அரசின் அதிகாரத்தை பயன் படுத்தி அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் குறைந்த, அதிகபட்ச வாடகை நிர்ணயித்தல், இதர பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X