பழனிசாமியின் உதவியாளர் திருச்சி சிறையில் அடைப்பு: ஏமாந்தவர்கள் புகார் அளிக்க போலீஸ் அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
10:46

சேலம்: 'முன்னாள் முதல்வரின் உதவியாளருக்கு, சேலம் மாவட்ட சிறையில் உதவிகள் கிடைக்க கூடும் என்பதால், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 'ஏமாந்தவர்கள் தயக்கம் இன்றி தைரியமாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்த குணசேகரன் மகன் தமிழ்ச்செல்வன், 29. இவருக்கு போக்குவரத்துக்கழகத்தில் இன்ஜினியர் வேலை வாங்கி தருவதாக கூறி, 13 லட்சம் மோசடி செய்ததாக, முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் மணி, 52, நேற்று முன்தினம் சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம், 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய பின், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை ஆத்தூர் கிளை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் சேலம் மாவட்ட சிறையில் அடைக்கப்படும் நிலையில், சிறை அதிகாரிகள் அவருக்கு உதவ கூடும். தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படுவதோடு, அவர் உள்ளே இருந்தபடி, வெளியே அவர் மீதான மேலும் பல மோசடி புகார்களை பொதுமக்கள் வழங்குவதை தடுக்க கூடும் என சிறைத்துறை விஜிலென்ஸ், உளவு அமைப்புகள் அறிக்கை அளித்தனர். அதன்படி மணியை, திருச்சி மத்திய சிறையில் அடைக்க சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. நேற்று முன்தினம் இரவு, சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் மணியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இது குறித்து மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: மணி மீது ஒருவர் அளித்த புகாரின் பேரில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. அவரிடம் அரசு வேலை, கட்சி பதவிக்கு பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தாராளமாக தயக்கம் இன்றி, தைரியமாக வந்து புகார் அளித்தால், உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்க போலீஸ் தயாராக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X