பாப்பிரெட்டிப்பட்டி: அரூர் போலீசார், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போதக்காடு, கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உரிமை பெறாத துப்பாக்கிகளை ஒப்படைக்க கடந்த ஒரு மாதமாக எச்சரிக்கை விடுத்து வந்தனர். நேற்று போதக்காடு, மலை பகுதியில் இரண்டு துப்பாக்கிகள், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எலந்தகொட்டப்பட்டியில் மூன்று துப்பாக்கிகளை மக்கள் வீசி சென்றுள்ளனர். இதை, எஸ்.ஐ., சக்திவேல் கைப்பற்றி விசாரிக்கிறார்.