கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பன், 32, விவசாயி. இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த நபர் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 250 ரூபாயை பறித்து கொண்டு தப்ப முயன்றார். முனியப்பனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அந்த நபரை பிடித்து டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் ராம்குமார், 32, என்பதும் கிருஷ்ணகிரி ரயில்வே காலனியை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருக்கும் நிலையில், ராம்குமாரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.