கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி, பில்லனகுப்பம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் மின் இணைப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: நகர்புற குடிசை மாற்று வாரியம் மூலம் பில்லனகுப்பத்தில் அரசு சார்பில், 525 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஒதுக்கீடு பெற்ற 125 பேரில், 20 குடும்பத்தினர் அவர்களுக்கென ஒதுக்கிய வீடுகளில் குடியேறி விட்டனர். ஆனால் இங்கு மின் இணைப்பு வழங்காததால், ஆழ்துளை கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் கடந்த ஒரு மாதமாக மிகவும் சிரமப்படுகிறோம். நான்காவது மாடியில் வசிப்போர் அருகில் சமத்துவபுரத்திலிருந்து நீரை எடுத்து மாடியேறி செல்ல வேண்டி உள்ளது. எனவே, விரைவில் மின் இணைப்பு வழங்கி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.