சாணார்பட்டி: அஞ்சுகுளிபட்டி சங்கிலியான் கோவில் நீர்த்தேக்கம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைந்தது. மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் மலர்தூவி வரவேற்றார்.
சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுழிபட்டி சங்கிலியான் கோவில் நீர்த்தேக்கம் 2009ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் முப்பது அடி உயரம் கொண்டது. இந்த பகுதிகளிலே பெரிய நீர்த்தேக்கம் ஆகும். அணை கட்டிய பிறகு முதன் முதலில் 2010ம் ஆண்டு நீர்த்தேக்கம் நிறைந்தது அதன்பிறகு தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அணை நிறைந்தது. அணை நிறைந்ததால் இடையன்குளம், செங்குளம் என பத்துக்கும் மேற்பட்ட குளங்கள் நிறையும் இதனால் இப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதனால் இப்பகுதி சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மலர் தூவி வரவேற்பு:
அணை நிறைந்ததை வரவேற்கும் விதமாக மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் அணையின் மதகு பகுதியிலிருந்து மலர் தூவி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சாணார்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் ராமராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜாசீனிவாசன், கவுன்சிலர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.