சுகாதார ஆய்வாளர்கள்கண்டன ஆர்ப்பாட்டம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சுகாதார ஆய்வாளர்கள்கண்டன ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 நவ
2021
23:20

கோவை: இளைய சுகாதார ஆய்வாளர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து, கோவை மாவட்ட அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் கூட்டமைப்பு கீழ், தமிழகம் முழுவதும் 1,646 இளைய சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த அடிப்படையில், கொரோனா காலத்தில் பணியாற்றி வந்தனர்.நேற்றுடன் இவர்களின் பணிகள் நிறைவடைந்தாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வாழ்வாதார கோரிக்கைக்காக போராடிய 1,646 சுகாதார ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.இதனை கண்டித்து, கோவை மாவட்ட அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் கூட்டமைப்பு சங்கத்தினர், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X