குப்பை, சாக்கடை அள்ளாமல் நகரமே நாறுகிறது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
23:29

விணாகும் தண்ணீர்மாநகராட்சி 99வது வார்டுக்குட்பட்ட, கோணவாய்க்கால் பாளையம், சுப்புராயன் முதலியார் வீதியில் நீண்ட நாட்களாக போர்வெல் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகி வருகிறது.- முத்துக்குமார், கோணவாய்க்கால் பாளையம்

நடைபாதை ஆக்கிரமிப்புவடவள்ளி, மருதமலை மெயின்ரோடு, பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள நடைபாதையை, சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை அகற்ற மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சித்ரா, வடவள்ளி

சாக்கடை சீரமைக்கணும்மாநகராட்சி 64வது வார்டுக்குட்பட்ட, உப்பிலிபாளையம், முதல் வீதியில், சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.- சூர்யா, உப்பிலிபாளையம்.

சாலை மோசம்மாநகராட்சி 81வது வார்டுக்குட்பட்ட, சி.எம்.சி.,காலனியில், துாய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், சாலை மிகவும் மோசமாக உள்ளது. குழந்தைகளும், முதியவர்களும் சாலையை கடக்கவே சிரமப்படுகின்றனர்.- சதீஸ், சி.எம்.சி.,காலனி

மினி பஸ் தேவைவடவள்ளி, காட்டு விநாயகர் கோவிலில் இருந்து, தொண்டாமுத்துார் மற்றும் மருதமலைக்கும், நவாவூர் பிரிவு வழியாக துடியலுார் ஆர்.டி.ஓ.,வரை, மினி பேருந்துகள் இயக்கினால் பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.- முத்துக்குமார், மருதமலை

வாகன ஓட்டிகள் சிரமம்சுப்பிரமணியம் பாளையம், எஸ்.எஸ்.கார்டன்ஸ் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால், சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.-ராஜாமணி, எஸ்.எஸ்.கார்டன்ஸ்

சுகாதார சீர்கேடுகுனியமுத்துார், குறிஞ்சி நகரில், சாக்கடை கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளிலும், நடைபாதைகளிலும் சூழ்ந்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- தேவா, குனியமுத்துார்

குப்பையால் அவதிபாப்பநாயக்கன் பாளையம், நேதாஜி ரோடு, ஜி.கே.டி.,நகர், பார்வதி ஸ்டோர்ஸ் எதிரில் நீண்ட நாட்களாக குப்பை அள்ளப்படாமல் உள்ளது.- நந்தினி, பாப்பநாயக்கன் பாளையம்

எரியாத விளக்குலட்சுமி மில்ஸ் சிக்னலில் இருந்து புலியகுளம் செல்லும் ரோட்டில், உயர்மட்ட மின் கோபுர விளக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எரியாமல் உள்ளது.- குணசேகரன், லட்சுமிமில்ஸ்

தொற்று நோய் அபாயம்மாநகராட்சி 30வது வார்டுக்குட்பட்ட, சரவணம்பட்டி, இளங்கோ வீதியில், சாக்கடை கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. தொற்றுநோய் பரவுவதற்கு முன், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- உமா மகேஸ்வரி, சரவணம்பட்டி

அச்சுறுத்தும் மின்கம்பம்கவுண்டம்பாளையம், ஸ்ரீவாரி வைபவ் குடியிருப்பு எதிரில் சாலை நடுவே மின்சார கம்பம் ஒன்று வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது. ஆம்புலன்ஸ் வந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும்.- ராமசுப்ரமணியம், கவுண்டம்பாளையம்

குப்பை வாகனம் எங்கே?மாநகராட்சி 76வது வார்டு தெலுங்குபாளையம், ஸ்ரீதுர்கா நகர் பகுதிக்கு குப்பை சேகரிக்கும் வாகனம் வந்து ஒரு மாதம் ஆகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- பிரேம்நிவாஸ், தெலுங்குபாளையம்

அள்ளப்படாத குப்பைவிளாங்குறிச்சி, காமாட்சியம்மன் கோவில் வீதியில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குப்பை அள்ளப்படாமல் உள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது.- நிர்மல்குமார், விளாங்குறிச்சி

குடிநீர் வீண்ஹோப்காலேஜ், லட்சுமிபுரம், 6வது வீதியில், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.-ராஜலட்சுமி, லட்சுமிபுரம்

இடம் மாற்றணும்துடியலுார், சுப்ரமணியம்பாளையம், பெரியார் நகர், குடியிருப்புக்கு மத்தியில் கழிப்பறை மற்றும் குப்பை கொட்டும் இடம் அமைந்துள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது.- கார்த்திகேயன், துடியலுார்

நொய்யலில் இறைச்சி கழிவுமுத்துசாமி காலனி விரிவு, புட்டுவிக்கி பாலம் சுண்டக்காமுத்துார் பைபாஸ் செல்லும் வழியில் நொய்யல் ஆற்றுப்பகுதியில், இறைச்சி கழிவும், பிளாஸ்டிக் குப்பையும் கொட்டப்பட்டு வருகிறது.- பிரபாகர், முத்துசாமி காலனி விரிவு

பாம்புகள் நடமாட்டம்வார்டு எண் 12, சாய்பாபா காலனி, கே.கே.புதுார்., ரமணி வீதியில் தபால் துறைக்கு சொந்தமான காலி இடத்தில் புதர் மண்டி கிடக்கிறது. பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.- வாசுதேவன், கே.கே.புதுார்.,

சாக்கடையில் புதர்பழனியப்பா லே அவுட், 97வது வார்டில் சாக்கடை கால்வாய், பராமரிப்பில்லாததால் புதர் மண்டியுள்ளது. சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பிரதோஷ்,கோவை

வாகன ஓட்டிகள் அவதிதடாகம் ரோடு, இடையர்பாளையம் செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. நகரின் பல சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் பயணிக்கவே முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- பாலச்சந்தர், கே.என்.ஜி.,புதுார்

மின்விளக்கு எரிவதில்லைசிங்காநல்லுார், 61வது வார்டு, கோத்தாரி நகரில் மின்விளக்குகள் ஒரு வார காலமாக சரிவர எரிவதில்லை.- சூர்யா, கோத்தாரி நகர்

மோசமான சாலைகவுண்டம்பாளையம், லட்சுமிநகர், 3வது வீதி, இங்குள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. பல மாதங்களாகியும் சீரமைக்கப்படவில்லை. மழைக்காலம் என்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர்.- கோமதி, கவுண்டம்பாளையம்

சீக்கிரம் சரி பண்ணுங்கபோத்தனுார், மேட்டூர் சாலை படுமோசமாக உள்ளது. இதனை அதிகாரிகள் சரி செய்து கொடுக்க வேண்டும்.- கண்ணன், போத்தனுார்

மின்கம்பம் பழுதுஎன்.எஸ்.என்.,பாளையம், தனலட்சுமி நகரில், மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. அதிலும், ஆஞ்சநேயர் கோவில் செல்லும் வழியில் உள்ள 30 எண் கொண்ட கம்பம், மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாய்ந்து விழுவதற்குள் சரி செய்ய வேண்டும்.- திவ்யலட்சுமி, தனலட்சுமிநகர்

பள்ளி முன் பெரிய குழிவெள்ளக்கிணறு, மான்செஸ்டர் சர்வதேச பள்ளியின் முன், சாலையில் சுமார் 100 மீட்டர் துாரத்திற்கு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் நடப்பதற்குள் அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜா, வெள்ளக்கிணறு

குழியானது குளம்!கோவை, நல்லாம்பாளையம், அமிர்த வித்யாலயம் பள்ளி செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழைக்காலங்களில், குளம்போல் தண்ணீர் தேங்கி விடுவதால், குழந்தைகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.- சுமதி, நல்லாம்பாளையம்

தொற்றுநோய் அபாயம்பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, 3வது வீதியில், மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது.- பிரியா, பொன்னையராஜபுரம்

படையெடுக்கும் பாம்புகள்வீரியம்பாளையம் ரோடு, திருமுருகன் நகரில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருக்கும் புதர் பல மாதங்களாக சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், பாம்புகள் அடிக்கடி குடியிருப்புகளுக்கு படை எடுக்கின்றன.- கவிதா, வீரியம்பாளையம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X