ரூ.2.27 கோடி சிக்கிய விவகாரம்: பெண் அதிகாரி கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
23:35

ஓசூர்:பெண் அதிகாரியிடம் 2.27 கோடி ரூபாய் லஞ்ச பணம் சிக்கிய நிலையில், நேற்று அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நேரு நகரைச் சேர்ந்தவர் ஷோபனா, 58;


வேலுார் கோட்ட பொதுப்பணித் துறையில், தொழில்நுட்ப கல்வி பிரிவு செயலராக பணியாற்றி வந்தார். இவர் ஒப்பந்ததாரர்களிடம் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக வந்த தகவலை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 2 மற்றும் 3ல், அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனை நடந்தது.


இதில் 2.27 கோடி ரூபாய், 3.92 லட்சம் ரூபாய் காசோலை, 11 வங்கி கணக்கு விபரங்கள், 35 சவரன் தங்க நகை, 1.3 கிலோ வெள்ளி பொருட்கள், 27.28 லட்சம் மதிப்பிலான வங்கி 'டிபாசிட்' ஆவணங்கள். பினாமிகள் பெயரில் இருந்த 14 சொத்து ஆவணங்கள் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி லாக்கர் சாவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கடந்த 15ம் தேதி லாக்கரை திறந்து பார்த்தபோது, அதிலும் சொத்து ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில், ஷோபனா சமீபத்தில் திருச்சி மண்டல பொதுப்பணித் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.


இதற்கிடையே, 2.27 கோடி ரூபாய் சிக்கியது தொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்த நேற்று காலை, ஓசூரில் உள்ள அவரது வீட்டிற்கு, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மதியழகன், வேலுார் இன்ஸ்பெக்டர் மைதிலி ஆகியோர் வந்தனர். காலை 11:00 மணி முதல், 12:30 மணி வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.


அப்போது, கணக்கில் வராத பணத்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும், அதை வழங்கிய ஒப்பந்ததாரர்கள் விபரம் உட்பட பல்வேறு கேள்விகளை போலீசார் முன்வைத்ததாக தெரிகிறது. பின் அவரையும், அவரது கணவர் நந்தகுமாரையும், வேலுாருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பல மணி நேரம் நடத்திய விசாரணையின் முடிவில், லஞ்சம் வாங்கியதற்கு போதிய ஆதாரங்கள் கிடைத்ததால் ஷோபனாவை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின், அவரை வேலுார் மகளிர் சிறையில் அடைத்தனர்.


கதவை திறக்காமல் அடம்




ஷோபனா வீட்டில் இருப்பது உறுதியான பின், நேற்று காலை 8:00 மணிக்கு, டி.எஸ்.பி., மதியழகன் தலைமையிலான போலீசார், அவரிடம் விசாரணை நடத்த வந்தனர். ஷோபனா வீட்டை பூட்டி திறக்காமலிருந்தார்.பகல் 11:00 மணி வரை, மூன்று மணி நேரமாக கதவை திறக்காததால், டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சாவித்திரி வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து எச்சரித்த பின் தான், ஷோபனா கதவை திறந்தார்.


வீட்டிற்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டபோது, 'நான் இன்னும் குளிக்கவில்லை' என கூறியுள்ளார். குளித்து விட்டு வந்து அவர் பதிலளித்த நிலையில், வேலுார் அழைத்துச் செல்ல இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.அதிர்ச்சியடைந்த அவர் பத்திரிகையாளர்கள் பார்வையில் படாதவாறு அழைத்து செல்லும்படி கேட்டுள்ளார். அதன்படி, போலீசார் அழைத்து சென்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X