தமிழக பொதுப்பணித் துறையினர் முகாம்:பெரியாறு அணை 142; வைகை அணை 70
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
23:46

கூடலூர்:முல்லை பெரியாறு அணையில் நேற்று அதிகாலை நீர்மட்டம் 142 அடி எட்டியதால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். கேரளப் பகுதிக்கு மூன்றாவது இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


ஒரு மாதமாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வந்தது. அக்டோபர் கடைசி வாரம் மற்றும் நவம்பர் முதல் வாரத்தில் கூடுதல் மழை பெய்து நீர்மட்டம் 142 அடியை எட்ட வாய்ப்பு இருந்தபோதிலும், அணை நீர்மட்டம் கால அட்டவணை (ரூல் கர்வ்) நடைமுறையால் தண்ணீர் தேக்க முடியவில்லை.


இந்த நடைமுறைப்படி நவ. 30ல் 142 அடி தேக்கலாம். நேற்று அதிகாலை 3:55 க்கு நீர்மட்டம் 142 அடியை எட்டியது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 2300 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 7666 மில்லியன் கன அடியாகும்.


கேரளப் பகுதிக்கு வெளியேற்றம்




அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 10:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 7991கன அடியாக இருந்தது. நீர்மட்டம் 142 அடிக்கு மேல் உயராமல் இருக்க, கேரளப் பகுதிக்கு 9 ஷட்டர்கள் திறக்கப்பட்டு 5691 கன அடி வெளியேற்றப்படுகிறது. மழை மற்றும் நீர்வரத்துக்கு ஏற்ப கேரளப் பகுதிக்கு வெளியேற்றும் தண்ணீரின் அளவு மாறுபடும்.


வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து உள்ளிட்ட பெரியாற்றின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்களுக்கு 3வது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தமிழக பொது பணித்துறை யினரால் விடுக்கப் பட்டது


.மதுரை மண்டல முதன்மை பொறியாளர் கிருஷ்ணன், கண்காணிப்புப் பொறியாளர் சுகுமார் தலைமையில் மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ராஜகோபால் உடன் இருந்தனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுப்பணித் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


70 அடியை கடந்த வைகை அணை




ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், வைகை அணைக்கு பெரியாறு, வருஷநாடு ஆறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. சில வாரங்களாக நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால் நீர்வரத்து கணிசமாக உள்ளது. அணை நீர்மட்டம் நவ.9ல் 69 அடியாக உயர்ந்தது. (அணையின் மொத்த உயரம் 71 அடி.)


இதனை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் அணை நீர் மட்டத்தை 70 அடியாக உயர்த்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

நவ. 25ல் 69.50 அடியாக இருந்த நீர்மட்டம் நவ. 27 ல் 69.72 அடியாகவும், நேற்று காலை 70.08 அடியாகவும் உயர்ந்தது. நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 1805 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 4951 கன அடியாகவும், மாலை 4:00 மணிக்கு 7866 கன அடியாகவும், மாலை 6:00 மணிக்கு 9791 கன அடியாகவும், இரவு 7:00 மணிக்கு 11,918 கன அடியாகவும் உயர்ந்தது. நீர்மட்டம் 70.08 அடியானது.


தற்போது அணைக்கு வரும் நீரில் 58 ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கனஅடி, மதுரை, ஆண்டிபட்டி - சேடபட்டி குடிநீருக்கு 69 கன அடியும் மீதியுள்ள 7756 கன அடி மொத்தமும் ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது.நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கரையோர கிராமங்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X