கூடலூர்:முல்லை பெரியாறு அணையில் நேற்று அதிகாலை நீர்மட்டம் 142 அடி எட்டியதால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். கேரளப் பகுதிக்கு மூன்றாவது இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கேரளப் பகுதிக்கு வெளியேற்றம்
70 அடியை கடந்த வைகை அணை
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், வைகை அணைக்கு பெரியாறு, வருஷநாடு ஆறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. சில வாரங்களாக நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால் நீர்வரத்து கணிசமாக உள்ளது. அணை நீர்மட்டம் நவ.9ல் 69 அடியாக உயர்ந்தது. (அணையின் மொத்த உயரம் 71 அடி.)
இதனை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் அணை நீர் மட்டத்தை 70 அடியாக உயர்த்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
நவ. 25ல் 69.50 அடியாக இருந்த நீர்மட்டம் நவ. 27 ல் 69.72 அடியாகவும், நேற்று காலை 70.08 அடியாகவும் உயர்ந்தது. நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 1805 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 4951 கன அடியாகவும், மாலை 4:00 மணிக்கு 7866 கன அடியாகவும், மாலை 6:00 மணிக்கு 9791 கன அடியாகவும், இரவு 7:00 மணிக்கு 11,918 கன அடியாகவும் உயர்ந்தது. நீர்மட்டம் 70.08 அடியானது.
தற்போது அணைக்கு வரும் நீரில் 58 ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கனஅடி, மதுரை, ஆண்டிபட்டி - சேடபட்டி குடிநீருக்கு 69 கன அடியும் மீதியுள்ள 7756 கன அடி மொத்தமும் ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது.நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கரையோர கிராமங்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.