ரூ.1,000 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
23:59

சேலம்:தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 1,000 கோடி ரூபாய் சொத்துக்கள், அதிகாரிகள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.


சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே, பாகல்பட்டி சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, பல்வேறு பகுதிகளில் இருந்த சொத்துக்கள், தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சேலம் திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன், மீட்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தார். நடவடிக்கை இல்லாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


இவ்வழக்கில், பல துறை அதிகாரிகள் குழு அமைத்து, கூட்டாய்வு நடத்த நீதிமன்றம் உத்தர விட்டது. இதன்படி, வருவாய், நில அளவை, பத்திரப்பதிவு மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.இக்குழு மூன்று நாட்களாக, பாகல்பட்டி, செல்லப்பிள்ளைகுட்டை, வெள்ளக்கல்பட்டி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.


இது குறித்து, திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:ஆய்வில், 81 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையோரம் முக்கிய பகுதிகளில் உள்ளன. இதன் மதிப்பு, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமானது.இவற்றில் பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.


கோவில் சொத்துக்களை பொறுத்தவரை, 100 ஆண்டுகள் பயன்படுத்தி வந்தாலும், அதற்கு யாரும் உரிமை கோர முடியாது. இதுபோல தமிழகம் முழுதும், 10 லட்சம் ஏக்கர்கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X