வியாபாரியிடம் ரூ.60 லட்சம் 'ஆட்டை' ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்தவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
00:04

தேனி:தேனி வியாபாரியிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த, ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.


தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அதிர்ஷ்டராஜா, 37. இவர் 'பொன்மணம்' என்ற பெயரில் ஆயில் மில் துவக்கினார். பாமாயில் கொள்முதல் செய்ய விரும்பி, இணையதளங்களில் பதிவு செய்தார்.


இதைப் பார்த்து, 2021 ஆகஸ்ட் 9ல் குறிப்பிட்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஒரு மெயில் வந்தது. அதில் பேசியவர்கூறியதை நம்பி, அதிர்ஷ்டராஜா 2021 ஆகஸ்ட் 11ம் தேதி, 1.40 லட்சம் ரூபாயை அனுப்பினார்.பின், 'கொரோனா என்பதால் விமானத்தில் பாமாயில் அனுப்ப முடியாது. 50 டன் என்றால் கடல் வழியாக 13 நாட்களுக்குள் இந்தியா வந்தடையும்' என ஆன்லைனில் தெரிவித்தனர்.


இதை நம்பியஅவர் பல்வேறு தவணைகளில் 60.45 லட்சம் ரூபாய் செலுத்தினார்.ஒரு கட்டத்தில், தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்த அதிர்ஷ்டராஜா, தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீசார் டில்லி சென்று, துவாரஹா ராஜ் நகரில் வசித்த, ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் சில்வஸ்டர் கேவ்மே, 34 என்பவரை கைது செய்தனர்.


அவரது காலாவதியான 'பாஸ்போர்ட்' பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X