பறிக்கப்பட்ட நகர ஊரமைப்புத்துறை அதிகாரம்! கடந்த ஆட்சியில் போட்ட உத்தரவு வாபஸ் பெறப்படுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
00:10



-நமது சிறப்பு நிருபர்-

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, நகர ஊரமைப்புத்துறையின் அதிகாரத்தில் தலையிட்டு, போடப்பட்ட உத்தரவை வாபஸ் பெற வேண்டுமென்று, முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், நகர ஊரமைப்புச் சட்டத்தில், புதிய மனைப்பிரிவுகளில் 10 சதவீதம் பொது ஒதுக்கீட்டு இடம் ஒதுக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது.இதற்காக 1992 ஆக.,20ல் போடப்பட்ட அரசாணை: 222ன் படியும் 2500 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பில் அமைக்கப்படும் அனைத்து லே-அவுட்களுக்கும், மொத்தப்பரப்பில் 10 சதவீத இடத்தை, 'ரிசர்வ் சைட்' ஆக தர வேண்டும்.இந்த இடங்களை தானப்பத்திரம் மூலமாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் வழங்க வேண்டும். அங்கு பூங்கா, விளையாட்டு மைதானம், சமுதாயக்கூடம் போன்றவற்றை அமைக்க இந்த இடம் பயன்படுத்தப்படும்.

நகராட்சித்துறை உத்தரவுசென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகர சூழல் பாதுகாப்பில், இந்த இடங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.ஆனால் இவற்றுக்கு சமாதி கட்டும் வகையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நகராட்சித்துறை ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.'2019ல் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த கட்டட வளர்ச்சி விதிகளில்,3000 சதுர மீட்டருக்கு உட்பட்ட லே-அவுட்களுக்கு, திறந்தவெளியிடம் ஒதுக்க வேண்டியதில்லை; 3000 சதுர மீட்டரிலிருந்து 10 ஆயிரம் சதுர மீட்டர் வரை பரப்பிலான திட்டங்களுக்கு, 10 சதவீத இடத்தை ஒதுக்கலாம்; அல்லது அந்த 10 சதவீத நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பை, அரசுக்குச் செலுத்தினால் போதும்' என்பதே அந்த உத்தரவு.இடம் ஒதுக்குவது நின்று போனதுஅதிலும் ஒரு சலுகையாக, 10 ஆயிரம் சதுர மீட்டரில் 3 ஆயிரம் சதுர மீட்டரைக் கழித்து, 7 ஆயிரம் சதுர மீட்டரில் 10 சதவீத இடத்தை ஒதுக்கினால் போதும் அல்லது அதற்கான வழிகாட்டி மதிப்பைச் செலுத்தினால் போதுமென்றும், அந்த விதிகளில் கூறப்பட்டது.

பெருநகரங்களில் 10 சதவீத இடத்துக்கான வழிகாட்டி மதிப்பை ஒப்பிடுகையில், சந்தை மதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்பதால், இந்த விதிமுறைகள் வந்தபின், பெரும்பாலான புரமோட்டர்கள் இந்த 10 சதவீத இடத்தை ஒதுக்குவதேயில்லை. அதற்குப் பதிலாக குறைந்த தொகையை அரசுக்குச் செலுத்தி விட்டு, சந்தை மதிப்பில் அந்த நிலத்தை விற்று பெரும் லாபம் பார்க்கின்றனர்.என்ன ஐடியா பாருங்கள்!இதற்காகவே ஒரே நிலத்தை நான்கு திட்டங்களாகப் பிரித்து, லே-அவுட் அமைக்கின்றனர். உதாரணமாக, 10 ஏக்கர் பரப்பில் லே-அவுட் போட்டால், ஒரு ஏக்கர் ரிசர்வ் சைட் ஒதுக்க வேண்டும். அதையே நான்காகப் பிரித்து திட்ட அனுமதி வாங்கி விட்டால் ஒதுக்கவே வேண்டியதில்லை

.இதனால் எதிர்காலத்தில் எந்த நகரிலும் மைதானம், பூங்கா அமைக்க இடமே இருக்காது. மாநகராட்சி தேவைக்கும் ஒரு இடமும் கிடைக்காது;இந்த உத்தரவை வாபஸ் பெற முதல்வர் உத்தரவிட வேண்டுமென்று, பல தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. இல்லாவிடில், எதிர்கால சந்ததிக்கு நல்ல காற்றைத் தரும்மரம் வைக்கவும் இடமிருக்காது; விளையாட மைதானமும் இருக்காது!

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X