மாநில கூட்டுறவு வங்கி தலைவரின் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
00:13

சேலம்:முன்னாள் முதல்வருக்கு நெருக்கமான, மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவரின் வங்கி லாக்கர்களை திறந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.


முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமானவரும், மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலர் இளங்கோவன்.இவர் மற்றும் இவருக்கு நெருங்கியவர்கள் வீடுகள், அலுவலகங்கள் என, 36 இடங்களில் அக்டோபர் 22ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.


இதையடுத்து, இளங்கோவன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சோதனைகளின் போது, இளங்கோவனின் வீட்டில் இருந்து, சில வங்கி லாக்கர்களின் சாவிகளை கைப்பற்றினர். இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் நேற்று முன்தினம் சேலம், முள்ளுவாடி கேட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள லாக்கர்களை திறந்து சோதனை செய்தனர்.


இதில், 35 சொத்து பத்திரங்கள், ஆவணங்கள் இருந்ததாக தெரிகிறது. அயோத்தியாபட்டணத்தில் உள்ள இந்தியன் வங்கி லாக்கர் திறக்கப்பட்டு, சோதனை செய்ததில், அதில் ஆவணங்கள் எதுவும் இல்லை. பின், சேலம் அம்மாபேட்டை கூட்டுறவு வங்கி உட்பட ஆறு வங்கிகளின் லாக்கர்களை திறந்து, ஆய்வு நடத்தினர்.


லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், 'லாக்கர்கள், வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தி, அது குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. 'லாக்கரில் இருந்த ஆவணங்கள் குறித்த விபரங்களை தெரிவிக்க இயலாது' என்றனர்.


மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் கூறுகையில், ''என் பெயரில் எந்த வங்கியிலும் லாக்கர் கிடையாது. யாரின் லாக்கரையோ திறந்து விட்டு, என் லாக்கர் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தவறான தகவல்களை பரப்புகின்றனர். இதை சட்டப்படி சந்திப்பேன்,'' என்றார்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X