மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு திண்டுக்கல் மாவட்டம்: 21 நாட்களில் 611 கட்டடங்களில் அமைப்பு உலக சாதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
00:46

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் 21 நாட்களில் 611 இடங்களில் சேமிப்பு தொட்டியுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.


திண்டுக்கல் ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் மாவட்டம் முழுதும் 21 நாட்களில் 600 இடங்களில் சேமிப்பு தொட்டியுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். நவ., 10 துவங்கி நேற்று (நவ., 30) வரை அரசு அலுவலகம், பள்ளி கட்டடங்கள் என மொத்தம் 611 இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கினர்.


ஒவ்வொரு கட்டமைப்பும் 9 ஆயிரம் முதல் 18 ஆயிரம் லிட்டர் மழைநீரை சேமிக்கும் விதமாக அமைக்கப்பட்டது. தேக்கிய மழைநீரை மின் மோட்டாரை பயன்படுத்தி தேவைக்கேற்ப உபயோகிக்கலாம்.உலக சாதனை சான்றுமொத்தம் 300 க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளை 4 உலக சாதனை நிறுவனங்களின் 11 ஆய்வாளர்கள் சில நாட்களாக ஆய்வு செய்தனர்.


பின்னர் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சீனியர் அட்ஜீடிகேட்டர் அமீத், ஹிங்க்ரோனி, ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி அம்பாசிடர் செந்தில்குமார், அட்ஜீடிகேட்டர் சாந்தாராம், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவன அசோசியேட் எடிட்டர் ஜெகன்நாதன், ரெக்கார்ட்ஸ் மேனேஜர் கார்த்திக் கனகராஜ், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூத்த பதிவு மேலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமாரிடம் உலக சாதனைக்கான சான்றிதழ்களை வழங்கினர்.


கலெக்டர் கூறுகையில், ''மழை நீர் சேகரிப்பு சாதனையை முதன்முறையாக திண்டுக்கல்லில் செய்துள்ளோம். ஒவ்வொரு தொட்டியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் 2 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10.33 கோடி லிட்டர் மழைநீரை சேமிக்க முடியும்'' என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X