கொலை வழக்கில் ஆயுள் தண்டனை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2021
02:02

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் 2013ல் நடந்த கார் டிரைவர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் சரணடைந்தார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே குப்பாணிவலசையைச் சேர்ந்தவர் கார் டிரைவர் முத்துசாமி என்ற அகமது 38. இவருக்கும் வாலாந்தரவையைச் சேர்ந்த பாஸ் என்ற பாஸ்கரன் 38, என்பவருக்கும் பணப் பிரச்னை இருந்தது. 2013 ஏப்.,18ல் முத்துசாமியை சாத்தான்குளம் அருகே குண்டூரணிக்கு வருமாறு பாஸ்கரன் கூறினார்.

முத்துசாமி, உறவினர் ராஜாவுடன் அங்கு சென்றார். அப்போது பாஸ்கரன், அவரது நண்பர்கள் முத்துசாமியை வெட்டிகொலை செய்தனர். தப்பிவந்த ராஜா புகாரில் பாஸ்கரன், ஜெயகிருஷ்ணன் 36, தினேஷ் 29, அர்ஜூனன் 29, சதீஷ் 32, மீது கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி ஸ்ரீனிவாசன், கடந்த அக்., 20ல் தீர்ப்பு வழங்கினார்.

அப்போது பாஸ்கரன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். ஜெயகிருஷ்ணன், தினேஷ், அர்ஜூனனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சதீஷ் விடுதலை செய்யப்பட்டார்.தலைமறைவாக இருந்த பாஸ்கரன் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கும் ஆயுள் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம், கட்டத்தவறினால், மேலும் ஆறு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X