'மாற்றி யோசி!'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
03:25

30 ஏரிகளை மாநகராட்சியிடம் ஒப்படைப்பது எப்போது?



ஆக்கிரமிப்புகள், வெள்ள சேதங்களை தவிர்க்க முடியும்இரண்டரை மாத குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யலாம்- நமது நிருபர்- -சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 30 ஏரிகளையும், முழுமையாக மாநகராட்சி பராமரிப்பிற்கு மாற்றினால் மட்டுமே, ஆக்கிரமிப்புகளையும், வெள்ள பாதிப்புக்களையும் நிரந்தரமாக தடுக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.



இதன் வாயிலாக, 3,000 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியில் மழைநீர் சேமிக்கப்பட்டு, சென்னையில் இரண்டரை மாத குடிநீர் தேவையையும் எளிதில் பூர்த்தி செய்யலாம் என, நீர்வள நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சி எல்லையில், 400 ஏரி, குளங்கள் இருந்த விபரம், 1909 - 1970 வரையிலான அரசு ஆவண வரைபடங்கள் வாயிலாக தெரியவருகிறது.



இவற்றில் தற்போது, வெறும் மூன்று ஏரி, 2௫ குளங்கள் மட்டுமே உள்ளன. இந்த குளங்கள் அனைத்தும், அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளவை. தெப்ப உற்சவம் உள்ளிட்ட ஆன்மிக வழிபாட்டிற்கான இந்த குளங்கள் மட்டுமே, ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட இதர துறைகளின் பராமரிப்பில் இருந்த மற்ற ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பாலும், அரசு திட்டங்களாலும் முற்றிலும் மாயமாகி உள்ளன.இந்த வகையில், 368 நீர்நிலைகள் இருந்த தடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. அதில், தேனாம்பேட்டை ஏரி, நுங்கம்பாக்கம் ஏரி, கோடம்பாக்கம் டேங்க் ஏரி, வேப்பேரி, கோயம்பேடு சுழல் ஏரி, கொடுங்கையூர் ஏரி, மயிலாப்பூர் ஏரி, மாம்பலம் ஏரி, அல்லிக்குளம் ஏரி ஆகியவை அடக்கம்.தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், முத்தமிழ் அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கோயம்பேடு பஸ் நிலையம், சந்தை, உள்ளிட்ட பல அரசு திட்டங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், இந்த நீர்நிலைகளை அழித்து தான் கொண்டு வரப்பட்டன.சென்னை மாநகராட்சி, 2011ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கத்துக்கு பின், சென்னை மாநகராட்சி எல்லைக்குள், 30 ஏரிகள் உள்ளன. இதில், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், அம்பத்துார், கொரட்டூர் உட்பட 27 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. சேத்துப்பட்டு ஏரி மீன்வளத்துறை கட்டுப்பாட்டிலும், சாத்தாங்காடு ஏரி வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளன. வில்லிவாக்கம் ஏரி மட்டும், மாநகராட்சி பொறுப்பில் உள்ளது.பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி, விவசாய பயன்பாட்டிற்கு உள்ள ஏரிகளுக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஏரிகளில், விவசாய பயன்பாடு இல்லாததால், இந்த ஏரிகளின் மேம்பாட்டிற்கு அத்துறை எந்த செலவும் செய்வதில்லை. இதனால் பராமரிப்பில்லாமல் ஏரி பாழாகிறது. அதே வேளையில், ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்றி பாழாகி இருந்த வில்லிவாக்கம் ஏரி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகராட்சியால் மேம்படுத்தப்பட்டு, தற்போது சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.



சேத்துப்பட்டு ஏரி, மீன்வளத்துறை வாயிலாக, சுற்றுச்சூழல் பூங்காவாக பராமரிக்கப்படுகிறது. இவற்றை தவிர, மற்ற ஏரிகள் அனைத்தும் பராமரிப்பின்றி படுமோசமாக காணப்படுகின்றன.இதில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக இருந்தாலும், சில ஏரிகளில் மாநகராட்சி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது. அந்த வகையில், மடிப்பாக்கம் ஏரியை மாநகராட்சி சீரமைத்தது. பள்ளிக்கரணை உட்பட மேலும் சில ஏரிகளிலும், சில மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி செய்தது.ஆனாலும், தொடர் பராமரிப்பில்லாமல், இந்த ஏரிகளில் மீண்டும் கழிவுநீர் கலந்து பழைய நிலைக்கே மாறி வருகின்றன.



இந்த ஏரிகள் அனைத்தையும், ஒட்டுமொத்தமாக மாநகராட்சி வசம் ஒப்படைத்தால், அவற்றை மேம்படுத்தவும், தொடர்ந்து பராமரிக்கவும் வழி கிடைக்கும்.மாநகராட்சிக்கு நிதி ஆதாரமும், பணியாளர்களும் அதிகம் என்பதால், ஏரிகளை பராமரிப்பது எளிதாக இருக்கும். கரைகளை பலப்படுத்தி, முறையாக வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை மீட்டு பராமரிக்கவும் வசதியாக அமையும். மேலும், பல்வேறு அமைப்புகள் வழங்கும் நிதியில், ஏரிகளை மேம்படுத்த முடியும். அபார வளர்ச்சி அடைந்த சென்னையில், நீர்நிலைகளை பாதுகாத்து, வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை முறையாக வைத்திருந்தால் மட்டுமே, மழையில் இருந்து சென்னையை ஓரளவு காப்பாற்ற முடியும்.ஒவ்வொரு ஏரிகளையும் கால்வாய்கள் வாயிலாக இணைத்தால், மழைநீரை அதில் சேமிக்க முடியும். குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தேங்குவதை தவிர்க்க முடியும்.இப்போதும், பல குளங்கள் சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பாதுகாப்பு நிதியில் மேம்படுத்தப்படுகின்றன. அதுபோல், ஏரிகளையும் மேம்படுத்த முடியும்.இதற்கு, சென்னை மாநகராட்சி எல்லைக்குள், பொதுப்பணித்துறை வசம் உள்ள ஏரிகளை, மாநகராட்சியிடம் ஒப்படைப்பது தான் தீர்வாக இருக்கும். முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பல ஏரிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது. புறநகர் ஏரிகளை பாதுகாப்பதிலேயே பல சிக்கல்கள் உள்ளன.



புறநகர் பகுதியை விட, மாநகராட்சி பகுதி வெள்ள பாதிப்பு தான் அதிக கவனம் பெறுகிறது. எங்களிடம் மாநகராட்சியை போல் ஊழியர்கள் இல்லை. ஏரிகளை மாநகராட்சி வசம் ஒப்படைத்தால் தான், நீரை சேமித்து வைப்பது, கழிவுநீர், ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கையை முறைப்படுத்த முடியும். முதல்வர் தலையிட்டால் மாநகராட்சி பகுதி ஏரிகளுக்கு தீர்வு கிடைக்கும். - பொதுப்பணித்துறை அதிகாரிகள்விவசாயத்திற்கு பயன்படாததால் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஏரிகள் மேம்பாட்டிற்கு ஒதுக்கும் நிதியை பொதுப்பணித்துறை நிறுத்திவிட்டது. இதனால், மேம்பாடும் இல்லாமல், ஆக்கிரமிப்பும் அதிகரித்து விட்டது. மாநகராட்சி வழியாக, அதிக நிதி ஆதாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.



மாநகராட்சி வசம் ஏரிகளை ஒப்படைப்பது தான் மேம்பாட்டிற்கு ஒரே தீர்வு. இதன் மூலம் ஏரிகளை பாதுகாத்து, ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியும். சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கும் தீர்வு காண முடியும். - சீனி சேதுராமன், 65, ஒருங்கிணைப்பாளர், நீர்நிலைகள் புனரமைப்பு இயக்கம், மடிப்பாக்கம்சென்னை மாநகராட்சி எல்லையில், தற்போதைய நிலவரப்படி உள்ள ஏரிகள் விவரம்:மண்டலம் ஏரியின் பெயர் பரப்பளவு (ஏக்கரில்) உரிமைமணலி கடப்பாக்கம் ஏரி 153 பொதுப்பணித்துறைமணலி சடையங்குப்பம் ஏரி 79 பொதுப்பணித்துறைமணலி அரியலூர் ஏரி 98 பொதுப்பணித்துறைமணலி மாத்துார் ஏரி 27 கால்நடை பல்கலைதிருவெற்றியூர் சாத்தாங்காடு ஏரி 70 வருவாய்த்துறைமாதவரம் ரெட்டேரி 550 பொதுப்பணித்துறைமாதவரம் பெரிய ஏரி 50 பொதுப்பணித்துறைஅம்பத்துார் அம்பத்துார் ஏரி 650 பொதுப்பணித்துறைஅம்பத்துார் கொரட்டூர் ஏரி 590 பொதுப்பணித்துறைஅம்பத்துார் கள்ளிக்குப்பம் ஏரி 18.5 பொதுப்பணித்துறைஅம்பத்துார் செங்குன்றம் ஏரி 10 பொதுப்பணித்துறைஅண்ணாநகர் சேத்துப்பட்டு ஏரி 9 மீன்வளத்துறைஅண்ணாநகர் வில்லிவாக்கம் ஏரி 36.5 மாநகராட்சிதிரு.வி.க.,நகர் கொளத்துார் ஏரி 4.9 பொதுப்பணித்துறைவளசரவாக்கம் ராமபுரம் ஏரி 3 பொதுப்பணித்துறைவளசரவாக்கம் ஆலப்பாக்கம் ஏரி 7 பொதுப்பணித்துறைவளசரவாக்கம் போரூர் ஏரி 220 பொதுப்பணித்துறைஆலந்துார் ஆதம்பாக்கம் ஏரி 20 பொதுப்பணித்துறைவேளச்சேரி வேளச்சேரி ஏரி 55 பொதுப்பணித்துறைபெருங்குடி மடிப்பாக்கம் ஏரி 60 பொதுப்பணித்துறைபெருங்குடி




சித்தேரி 26 பொதுப்பணித்துறைபெருங்குடி நாராயணபுரம் ஏரி 30 பொதுப்பணித்துறைபெருங்குடி அணை ஏரி 60 பொதுப்பணித்துறைபெருங்குடி பெரிய ஏரி 10 பொதுப்பணித்துறைபெருங்குடி பள்ளிக்கரணை சித்தேரி 15 பொதுப்பணித்துறைபெருங்குடி பெருங்குடி ஏரி 30 பொதுப்பணித்துறைசோழிங்கநல்லுார் ராமன்நகர் ஏரி 20 பொதுப்பணித்துறைசோழிங்கநல்லுார் பெரிய ஏரி 25 பொதுப்பணித்துறைசோழிங்கநல்லுார் செம்மஞ்சேரி ஏரி 15 பொதுப்பணித்துறைசோழிங்கநல்லுார் புதுச்சேரி ஏரி 10 பொதுப்பணித்துறைநிதி ஆதாரம் எப்படி?சென்னையில், சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதியில், பல குளங்கள், சில ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, சி.எஸ்.ஆர்., நிதி, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை,



பிரதமர் நீர்பாசன திட்டம், தமிழக அரசு சிறப்பு நிதி, மாநகராட்சி நிதி, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் நிதி என, பலதரப்பட்ட நிதிகள் வழியாக ஏரிகளை மேம்படுத்தி, ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியும். இதற்கு, ஏரிகள் மாநகராட்சியின் சொத்தாக இருக்க வேண்டும்.மார்க்கம் உண்டு; மனம் இல்லை!மாநகராட்சி எல்லையில் உள்ள மொத்த ஏரி - 3030 ஏரிகளின் தற்போதைய மொத்த பரப்பளவு - 2,952 ஏக்கர்மாநகராட்சி வசம் - 36.5 ஏக்கர்வருவாய்த்துறை வசம் - 70 ஏக்கர்மீன்வளத்துறை வசம் - 9 ஏக்கர்பொதுப்பணித்துறை வசம் - 2,836.5 ஏக்கர்* இந்த ஏரிகளை சராசரியாக 15 அடி வரை ஆழப்படுத்தி, நீரை தேக்கினால் குறைந்தபட்சம் 2.5 டி.எம்.சி., நீரை சேமிக்கலாம். இது, சென்னை நகரின் இரண்டரை மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X